ETV Bharat / state

தேனி எம்.பி ரவீந்திரநாத் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ்.. பின்னணி என்ன? - எம்பி ரவீந்திரநாத் அலுவலகம் முற்றுகை

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பாத தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Gas
Gas
author img

By

Published : Mar 12, 2023, 5:59 PM IST

எம்.பி ரவீந்திரநாத் அலுவலகம் முற்றுகை

தேனி: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் இன்று(மார்ச்.12) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மகிளா காங்கிரசைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய பாஜக அரசைக் கண்டிக்கும் வகையில் பெண்கள் காலி கேஸ் சிலிண்டரை சுமந்தபடி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர், காலி கேஸ் சிலிண்டரை கையில் பிடித்தபடி, வைகை அணைச் சாலையிலிருந்து பேரணியாக சென்றனர்.

பின்னர், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பாத தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தை கண்டித்து, பெரியகுளத்தில் உள்ள அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரலெழுப்பாத எம்.பி ரவீந்திரநாத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். எம்.பி ரவீந்திரநாத் ஓட்டு போட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்றும், நாடாளுமன்றத்தில் ஊமையாக இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினர்.

போராட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றபோது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர். இந்த முற்றுகை போராட்டத்தால் தேனி - திண்டுக்கல் சாலையில் 30 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த சில சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 1ஆம் தேதி, 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்படி, சென்னையில் சமையல் சிலிண்டர் 1,118 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. அதேபோல் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சுமார் 350 ரூபாய் உயர்த்தப்பட்டு, 2,119 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயை கடந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1068.50 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு புறம் சமையல் எரிவாயு விலை அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்படுகிறது. இதனால் விமான எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதில், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், இந்த விலை உயர்வு எண்ணெய் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மத்திய அரசு கூறி வருகிறது.

இதையும் படிங்க: டோல்கேட் கட்டண உயர்வு முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.