தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்த வனத் துறையினர் போராடியும் வருகின்றனர். ஆனால் காட்டுத் தீ அவ்வப்போது எரிந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் இன்று பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோயில் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரியத்தொடங்கியது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இருந்த போதிலும் தீ பற்றி தற்போது வரை எரிந்துகொண்டுதான் இருக்கிறது. கொழுந்து விட்டு எரியும் தீயினால், வனப்பகுதிகளில் உள்ள அரியவகை மரங்களும், மூலிகை செடிகளும் எரிந்து நாசமாகின்றன. மேலும் பற்றி எரிந்து வரும் தீயை கட்டுக்குள் கொண்டு வர வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.