ETV Bharat / state

சிறுத்தை உயிரிழப்பு; எம்.பி. ரவீந்திரநாத்தை விசாரிக்க மக்களவை சபாநாயகருக்கு வனத்துறையினர் கடிதம் - Lok Sabha Speaker to permit investigate MP

தேனியில் மின்கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் எம்.பி. ரவீந்திரநாத்தை விசாரிக்க அனுமதி கேட்டு மக்களவை சபாநாயகருக்கு வனத்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சிறுத்தை உயிரிழந்த விவகாரம்
சிறுத்தை உயிரிழந்த விவகாரம்
author img

By

Published : Oct 14, 2022, 3:57 PM IST

Updated : Oct 14, 2022, 4:11 PM IST

தேனி: பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டியில் தேனி மக்களவைத்தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் வேலியில் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று சிக்கிய நிலையில், அதனை மீட்கச்சென்ற வனத்துறையினர் மீது சிறுத்தை தாக்கி தப்பிச் சென்றது.

இந்நிலையில் மறுநாளே அதே தோட்டத்தில் சிறுத்தை சோலார் மின் வேலியில் மாட்டி உயிர் இழந்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இது தொடர்பாக ரவீந்திரநாத் (ஓபிஆர்) தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்த ஒருவரையும் அதனைத்தொடர்ந்து ரவீந்திரநாத்தின் மேலாளர்கள் இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

இந்தச்சூழலில், சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் எம்.பி. ஓபிஆர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட திமுக வடக்கு மாவட்டச்செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், மற்றும் பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணகுமார் தலைமையிலான திமுகவினர் தேனி மாவட்ட வன அலுவலர் சம்ருதாவிடம் புகார் ஒன்றை அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை தோட்டத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் , “சிறுத்தை சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த இடத்தின் உரிமையாளர்களில் ஒருவர் தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத். இந்த விவகாரத்தின் ஒளிவுமறைவற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டோம்.

சிறுத்தை உயிரிழப்பு; எம்.பி. ரவீந்திரநாத்தை விசாரிக்க மக்களவை சபாநாயகருக்கு வனத்துறையினர் கடிதம்

தோட்டத்தின் உரிமையாளரான ஓபிஆர், எம்.பி. ஆக இருப்பதால் அவரை விசாரணை செய்யவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரின் அனுமதி தேவை என்பதால் இது குறித்து வனத்துறையினர், சபாநாயகருக்கு எம்.பி. மீது விசாரணை நடத்த அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி இருப்பதாக வனத்துறை அலுவலர் தெரிவித்துள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மகள் கொலை... தந்தை தற்கொலை... தாய்க்கு புற்றுநோய் சிகிச்சை... உருக்குலைந்த குடும்பம்...

Last Updated : Oct 14, 2022, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.