தேனி: மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தில் கற்கள், மரக்கட்டைகள் அடித்துவருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆக.31ஆம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்தத்தடை தொடர்ந்து வருகிறது. இதனால் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஓணம் பண்டிகை அதைத்தொடர்ந்து வாரவிடுமுறை நாள்கள் என்பதால் சுற்றுலா தலங்கள் கூட்டம் அலைமோதிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முடிந்தது...கேரளாவில் பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி...