தேனி: கம்பம் அருகே அமைந்துள்ளது சுருளி அருவி, தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை நீர் வரத்து அதிகமாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் அதிக வருகை தருவர். இங்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தருவர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சுருளி அருவில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில், கற்கள் பாறைகள் விழும் அபாயம் உள்ளது.
இதனால், அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏதுவான சூழல் இல்லாத காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதையும் படிங்க: முல்லை பெரியாறு அணை: 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை