ETV Bharat / state

முழுக் கொள்ளளவை நெருங்கிய வைகை அணை!- வெள்ள அபாய எச்சரிக்கை - வைகை பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை

flood in Vaigai dam: தொடர் கன மழையால் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைகை கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
முழுக் கொள்ளளவை எட்டுமா வைகை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 12:44 PM IST

முழுக் கொள்ளளவை எட்டுமா வைகை

தேனி: தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர் மட்டமானது அதிகரித்து வந்ததையடுத்து அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, மேகமலை, அரசரடி, பொம்மராஜபுரம், கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய கனமழை தற்போது வரை பெய்து வருகிறது. குறிப்பாக வருசநாடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 18 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

வைகை அணை நீர்மட்டம்: மேலும் நேற்று வைகை அணைக்கு வரும் நீர் வரத்தானது 1,811 கனஅடியாக இருந்த நிலையில் இன்று பெய்து வரும் இந்த தொடர் கனமழை காரணமாக தற்போது வைகை அணைக்கு சராசரியாக 17,197 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இது மட்டுமின்றி முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் எட்டிய நிலையில் அங்கிருந்து திறந்து விடப்படும் நீரானது வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான மூல வைகை ஆற்றிற்கு வந்து சேர்ந்து கொண்டுள்ளது. மேலும் மூல வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகவும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதையும் படிங்க: ஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றாலம்: அருவிகளை நெருங்க தடை..அமைச்சர் நேரில் ஆய்வு!

இந்நிலையில் தற்போது வைகை அணையில் நீர்மட்டம் 66 அடி இருக்கும் நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு கடந்த ஒரு மணி நேரமாக 19,280 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3169 அடியாக இருக்கும் நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை: இதனால் தொடர்ந்து வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரித்து வருவதால் வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது வரை மழை தொடர்வதால் வைகை ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மழை தொடர்வதால் வைகை அணைக்கு நீர்வரத்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கூடுதலாக அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதனால் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவோ ஆற்றின் அருகே செல்லவோ வேண்டாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: மேலும் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விடிய விடிய கனமழை பெய்து வந்ததை அடுத்து சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை உள்ளிட்ட வனப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த காட்டு நீரோடைகள் சுருளி அருவியில் கலந்த நிலையில் சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கனமழை பெய்து வருவதால் சுருளி அருவி பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்ப்பு: வைகை ஆற்றில் நீர் கரை புரண்டு ஓடுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வைகை, கொட்டக்குடி மற்றும் சுருளியாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வைகை உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளில் இறங்கவோ கடக்கவோ வேண்டாம் என்று தேனி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஆயிரம் வருடத்தில் கூட இப்படி மழை இருந்திருக்காது! காயல்பட்டிணத்தில் 932 மி.மீ. மழை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.