தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதையொட்டி வெள்ளப்பெருக்கு காலங்களில் நீர் நிலைகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வாழைமரம், லைப் ஜாக்கெட், டியூப், காலிபாட்டில், பலூன், காலிகுடம், காலிசிலிண்டர், நெகிழி பந்து போன்றவைகளை பயன்படுத்தி திடீரென ஏற்படும் வெள்ளபெருக்கிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும், ரப்பர் படகினை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்தும், பாதிப்படைந்தவர்களை மீட்டு முதலுதவி அளிப்பது குறித்தும் 146 தன்னார்வ நபர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர், "மழைக்காலங்களில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் பாதுகாப்பதற்கு காவல்துறையினருக்கும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும் அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், குளங்கள், வரத்து வாய்க்கால்கள், சிறுபாசன குளங்கள், ஊரணிகள், மதகுகள் உள்ளிட்டவைகள் குடிமராமத்துத்திட்டத்தின் கீழ் அரசின் அறிவுறுத்தலின்படி முறையாக சீரமைக்கப்பட்டுள்ளது." என்று கூறினார்.
இதையும் படியுங்க: