ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் - ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஜோதி ஓட்டம் - ராமநாதபுரத்திலிருந்து தேனி வரை

தேனி: முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரளாவில் செய்து வரும் பொய் பரப்புரையை கண்டித்து, வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டம் வரையில் தொடர் ஜோதி ஓட்டம் நடைபெறவுள்ளதாக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர். தேவர் தெரிவித்தார்.

farmers
farmers
author img

By

Published : Nov 27, 2020, 3:39 PM IST

இது குறித்து, ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர். தேவர், தேனி மாவட்டம் கம்பத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் தென்மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் தொடர்ந்து பொய் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக முல்லைப் பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டதாகவும், இதற்கு மாற்றாக புதிய அணை கட்டப்பட வேண்டும் என்றும், அதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்கு மத்திய நீர் வள ஆணையம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் அனுமதியை கேரள அரசு பெற்றுள்ளது.

முதற்கட்டமாக தற்போது ஆய்வுப் பணிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கேரளாவின் இந்த அடாவடி செயல் தமிழ்நாட்டு மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டப்பட்டால் தென் மாவட்டங்களில் உள்ள சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பாதிப்படையும்.

ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஜோதி ஓட்டம்

எனவே, கேரளா அரசின் அடாவடி செயலை கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை மக்களுக்கு உணர்த்தவும் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற உள்ளது. முல்லைப் பெரியாற்றின் கடைமடை பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் பெரிய கண்மாயில் இருந்து டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி தலைமதகுப் பகுதியான லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் நிறைவடைய உள்ளது. இந்த தொடர் ஜோதி ஓட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்வார்கள்" என்றார்.

இதையும் படிங்க: பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.