தேனி மாவட்டம், பெரியகுளம் சுற்றுவட்டாரப்பகுதியில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கும்பக்கரை, கல்லாறு உள்ளிட்டப்பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்தது.
அதேபோல், கடந்த மாதம் வரை தொடர்ந்து பெய்த தென்மேற்குப் பருவ மழையால், பெரியகுளத்தின் வடகரைப் பகுதியில் உள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளதால், இந்த ஆண்டிற்கான முதல் போக சாகுபடியை தொடங்குவதற்காக விவசாயிகள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் நடவுப்பணிகளைத்தொடங்க நெல் நாற்றங்கால் பாவி முடிக்கப்பட்ட நிலையில், முதல்கட்டப்பணிகளான வயல்வெளிகளை சமப்படுத்தும் உழவுப்பணிகளில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த ஆண்டு தொடர்ந்து பருவ மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்கள் நடவுப்பணியை முன்கூட்டியே தொடங்கியுள்ளனர். நெல் நாற்று பாவி வளர்ந்து, நடவுப் பணிக்குத்தயாராக உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த ஆண்டு முதல் போக நெல் சாகுபடியில் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உழவுப்பணிகளை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ஏற்காடு தலைச்சோலை கிராமம் போதைப்பொருள் இல்லாத கிராமமாக அறிவிப்பு