ETV Bharat / state

'மேகதாதுவில் அணை கட்டும் பணிக்கு ஓபிஎஸ் மகன்தான் மணல் சப்ளை' - ஈவிகேஎஸ் இளங்கோவன் புகார் - ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்

தேனி: காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு கட்ட இருக்கும் மேகதாது அணைக்கு மணல் சப்ளை செய்வது ஓபிஎஸ் மகன்தான் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்கள் சந்திப்பு
author img

By

Published : Apr 14, 2019, 10:30 PM IST

தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடகாவில் தமிழக மக்களுக்கு விரோதமாக மேகதாது அணை கட்டப்படுவதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த அணை கட்டுவதற்கான மணல் சப்ளை செய்வது தேனியில் ஆளும் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார்தான். இதை அறிந்து டெல்டா பகுதி விவசாயிகளும் கொதித்துப் போயுள்ளனர்.

கர்நாடகாவிற்கு மணல் சப்ளை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து மக்களுக்கு துரோகம் செய்ய எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது. பணம் வந்தால் போதும் என்று இருக்கிறார்கள். இவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். பிரதமரின் தேனி பொதுக்கூட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களில் தலா ஆயிரம் ரூபாய் கொடுத்து கூப்பிட்டு வந்துள்ளனர். இருந்த போதிலும் கூட்டம் கூடவில்லை. இதெல்லாம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தான் விசாரிக்க வேண்டும். என்னைப் பற்றி பேசிய மோடி வெளியூர்களில் இருந்து ஆட்களை கொண்டு வந்திருப்பதாக கூறுகிறார். அவர் உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடலாமா, குஜராத்தில் இருந்து இங்கு வந்து ஓட்டு கேட்கலாமா..? இதெல்லாம் இந்திய ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல், என்றார்.

மேகதாது அணைக்கு ஓபிஎஸ் மகன் மணல் சப்ளை செய்வதாக சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது தொடர்பாக வார இதழ்களில் எழுதி இருக்கிறார்கள். என் மீது வழக்கு போடட்டும், ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன், என்றார். மேகதாது அணை கட்டப்படும் என ராகுல் காந்தி கர்நாடகாவில் பேசியது குறித்து கேட்டப்போது, காங்கிரஸ் தேசிய தலைவராக இருக்கக் கூடியவர் இரு மாநில பிரச்னைகளில் அப்படி பேச வாய்ப்பு இல்லை. நீங்கள் ஆதாரம் கொடுத்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்கத் தயார், என்றார்.

Intro: காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு கட்ட இருக்கும் மேகதாது அணைக்கு மணல் சப்ளை செய்வது ஓபிஎஸ் மகன்தான் என ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

Body: தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று தேனியில் அவர் தங்கியிருக்கும் இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடகாவில் தமிழக மக்களுக்கு விரோதமாக மேகதாது அணை கட்டப்படுவதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த அணை கட்டுவதற்கான மணல் சப்ளை செய்வது தேனியில் ஆளும் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பவர் தான். இந்த செய்தியை கேள்விப்பட்டு மக்களும்,டெல்டா பகுதி விவசாயிகளும் கொதித்துப் போயுள்ளனர்.
தமிழக மக்களுக்கு எதிராக கர்நாடகாவிற்கு மணல் சப்ளை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து மக்களுக்கு துரோகம் செய்ய எப்படி இவர்களுக்கு மனம் வந்தது. பணம் வந்தால் போதும் என்று இருக்கிறார்கள். இந்த தேர்தலில் மேகதாது அணை கட்ட துணைபோகும் ஓபிஎஸ் மகனுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார்.
பிரதமர் தேனிக்கு வருகை தந்தபோது பொதுக்கூட்டத்திற்கு தேனி மக்கள் யாரும் வரவில்லை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களில் தலா ஆயிரம் ரூபாய் கொடுத்து கூப்பிட்டு வந்தார்கள். இருந்த போதிலும் கூட்டம் கூடவில்லை. இதெல்லாம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தான் விசாரிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் கூட்டத்தினிடையே பேசிய ஓபிஎஸ் அடுத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசயிருக்கிறார், உற்சாகமாக கைதட்டுங்கள் என்கிறார். அதனைக் கேட்ட மக்கள், கூட்டத்திற்கு வருவதற்கு தான் பணம் கொடுத்தீர்கள், கைதட்ட வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.
என்னை பற்றி பேசிய மோடி வெளியூர்களில் இருந்து ஆட்களை கொண்டு வந்திருப்பதாக கூறுகிறார். அவர் உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடலாமா, குஜராத்தில் இருந்து இங்கு வந்து ஓட்டு கேட்கலாமா. ஜெயலலிதா ஆண்டிபட்டியில் போட்டியிடவில்லை. இதெல்லாம் இந்திய ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்.தேனி தொகுதியில் ஆயிரம் மோடிகள்! ஆயிரம் கேடிகள் வந்தாலும் என்னை தோற்கடிக்க முடியாது. நான் எம்பியாக பணியாற்றுவதை விட மக்கள் சேவகனாக பணியாற்ற விரும்புகிறேன் என்றார்.
மேகதாது அணைக்கு ஓபிஎஸ் மகன் மணல் சப்ளை செய்வதாக சொல்கிறீர்களே ஆதாரத்தோடு தான் சொல்கிறீர்களா என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இது தொடர்பாக வார இதழ்களில் எழுதி இருக்கிறார்கள். என் மீது வழக்கு போடட்டும், ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன். ஜெயலலிதா என் மீது வழக்கு போட்டார், ஆனால் வாய்தா, வாய்தா வாங்கிக் கொண்டிருந்தார். ஒரு முறையாவது ஜெயலலிதாவை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என நினைத்தேன், அதற்குள் அவர் இறந்து விட்டார்.
இப்போது எடப்பாடி என் மீது வழக்கு போட்டிருக்கிறார், எப்படியாவது எடப்பாடியை குறுக்கு விசாரணை செய்வேன் என்றார். நேற்று தேனியில் பேசிய முதல்வர், மேகதாது அணை கட்டப்படும் என ராகுல் காந்தி கர்நாடகாவில் கூறியிருக்கிறார் என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது,
நான் அப்படி கேள்விப்படவில்லை, காங்கிரஸ் தேசிய தலைவராக இருக்கக் கூடியவர் இரு மாநில பிரச்சனைகளில் அப்படி பேச வாய்ப்பு இல்லை. நீங்கள் ஆதாரம் கொடுத்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்கத் தயார் என்றார்.
தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு எடுபிடியாக இருக்கிறது. ஆளும் கட்சியினர் கோடி, கோடியாக பணத்தை குடோன்களில் பதுக்கி வைத்துள்ளனர். அதெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. ஆனால் எதிர் கட்சி காரர்கள் வீட்டில் சோதனை மேற்கொள்கின்றனர்.
மோடி கங்கையைப்போல் வைகையை சுத்தப்படுத்துவேன் என்று சொல்வதெல்லாம் பொய். இப்போதும் வாரணாசியில் சென்று பாருங்கள் பிணங்கள் செத்து மிதக்கின்றன. தேனியில் பன்னீர்செல்வம் பணம் சுனாமி அடிக்கிறது. சுனாமியை சமாளிக்கும் திறன் எங்களிடம் இருக்கிறது.
வாரிசு அரசியல் பற்றி மோடி தேனியில் தவறாக பேசியிருக்கிறார். ஓபிஎஸ் மீது இருக்கின்ற வெறுப்பினால், அவரை ஆதரித்து பேசாமல், எதிர்த்துப் பேசி இருக்கிறார். வாரிசு அரசியல் இங்குதான் நடக்கிறது என்றார்

Conclusion: பேட்டி : ஈவிகேஎஸ் இளங்கோவன் ( காங்கிரஸ் வேட்பாளர், தேனி பாராளுமன்ற தொகுதி)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.