ETV Bharat / state

ராகிங் தடுப்புச் சட்டத்தில்  8 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கைது! - தேனி

தேனி: அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் மீது ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி வளாகம்
author img

By

Published : Aug 28, 2019, 11:13 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2004ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. இக்கல்லூரியில், முதலாண்டு முதல் இறுதியாண்டுவரை சுமார் 400 மாணவர்களும், 100 பயிற்சி மருத்துவர்களும் பயின்றுவருகின்றனர். இவர்களில், பெரும்பாலானோர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியிலேயே தங்கியுள்ளனர்.

இந்நிலையில், முதலாண்டு மருத்துவ மாணவர் முகேஷ்குமார் என்பவர் தன்னை மூன்றாமாண்டு மாணவர்கள் ராகிங் செய்ததாக ராக்கிங் தடுப்பு இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளார். இப்புகார் குறித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் துறைரீதியாக மாணவர்களிடம் தனித்தனியே மேற்கொண்ட விசாரணையில் ராகிங் செய்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளது என உறுதியானது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி

இதனையடுத்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் க.விலக்கு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மூன்றாமாண்டு மருத்துவ மாணவர்களான குருபிரகாஷ், முகமதுஇம்ரான், கவின் தமிழன், மவுலிதரண், பிரவீன்குமார், ஹரிஹரன், ஜெப்ரின், நிலோஸ் ஆகிய எட்டு பேர் மீது ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்கள் 8பேர் மீது ராகிங் கொடுமை வழக்குப் பதிவு.
முதலாமாண்டு மாணவரை கல்லூரி விடுதியில் ராகிங் கொடுமை செய்ததாக மூன்றாண்டு மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை.Body: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கில் தேனி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டும் இங்கு 100 மருத்துவ மாணவர்கள் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்று வருகின்றனர். முதலாண்டு முதல் இறுதியாண்டான நான்காம் ஆண்டுவரை 400 இருபால் மருத்துவமாணவர்களும், 100 பயிற்சி மருத்துவர்களும் கல்வி கற்று வருகின்றனர், இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியிலேயே தங்கியுள்ளனர்.
இந்நிலையில் முதலாண்டு மருத்துவ மாணவர் முகேஸ்குமார் என்பவர் தன்னை மூன்றாமாண்டு மாணவர்கள் ராக்கிங் தொந்தரவு செய்ததாக
ராக்கிங் தடுப்பு இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளார்.
இப்புகார் குறித்து தேனி அரசுமருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் துறைரீதியாக மாணவர்களிடம் தனித்தனியே மேற்கொண்ட ரகசிய விசாரணையில் ராக்கிங் செய்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளது என உறுதியானது.
இதனையடுத்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் க.விலக்கு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மருத்துவ மாணவர்கள் 8பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர்களான குருபிரகாஷ், முகமதுஇம்ரான், கவின்தமிழன், மவுலிதரண், பிரவீன்குமார், ஹரிகரன், ஜெப்ரின், நிலோஸ் ஆகிய 8 பேர் மீது anti rocking act
பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Conclusion: சென்னை போன்ற பெருநகரங்களில் நடைபெற்று வந்த ராக்கிங் கொடுமை பின்தங்கிய கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள தேனிஅரசுமருத்துவக்கல்லூரியிலும் கல்லூரி துவங்கி 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சம்பவத்தால் கல்லூரி வளாகம் மட்டுமல்லாது தேனி மாவட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.