ETV Bharat / state

குஜராத்தில் ஓபிஎஸ்.. தேனியில் ஈபிஎஸ்.. இருப்பை நிரூபிக்க போட்டாபோட்டி.. - Erode by election candidate

குஜராத்தில் நடைபெற்ற தமிழ் சங்க விழாவில் ஓபிஎஸ் கலந்து கொண்ட நிலையில், ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டத்துக்கு ஈபிஎஸ் விசிட் அடித்துள்ளார்.

குஜராத்தில் ஓபிஎஸ்.. தேனியில் இபிஎஸ்.. இருப்பை நிரூபிக்க போட்டாபோட்டி!

author img

By

Published : Jan 23, 2023, 12:37 PM IST

தேனி: அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத்தலைமை விவகாரம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படாலம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், அதற்கேற்ப ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒற்றைத்தலைமை விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியின் வேட்பாளர் குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதிமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக உடனான பேச்சுவார்த்தைக்காக, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை, பாஜக தலைமை அலுவலகத்தில் ஒரு மணி நேர இடைவெளியில் சந்தித்து பேசினர்.

இந்த நிலையில் நேற்று (ஜன.22) குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற கர்ணாவதி தமிழ் சங்கத்தின் பொங்கல் விழாவில் ஓபிஎஸ் கலந்து கொண்டார். பாஜக மேலிடத்தின் ஆதரவு தனக்கு இருப்பதை நிரூபிக்கவே குஜராத்துக்கு அடிக்கடி ஓபிஎஸ் சென்றுவருகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மறுபுறும் ஈபிஎஸ் இன்று (ஜன.23) தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற அதிமுகவின் இல்ல விழாவில் கலந்து கொண்டார். இது ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமாகும். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் ஈபிஎஸ் தனக்கு உள்ள பலத்தை காண்பிக்கவே தேனி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக விருப்பமனு அளிக்கலாம் - ஈபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.