ETV Bharat / state

பெரியகுளம் சோத்துப்பாறை அணையின் கொள்ளளவு மளமளவென சரிந்தது: காரணம் என்ன? - பெரியகுளம் சோத்துப்பாறை அணை

பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் நீர் வரத்து முற்றிலும் இல்லாத காரணத்தினால் அணையின் கொள்ளளவு 91 அடியாக மளமளவென சரிந்தது.

சோத்துப்பாறை அணை
சோத்துப்பாறை அணை
author img

By

Published : Feb 6, 2023, 3:42 PM IST

பெரியகுளம் சோத்துப்பாறை அணையின் கொள்ளளவு மளமளவென சரிந்தது

தேனி: பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையானது பெரியகுளம் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 3000த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பின் பாசனத்திற்காகவும் பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையால், இதன் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 126.28 அடி முழு கொள்ளளவை எட்டி 100 நாட்களுக்கும் மேலாக நீர் இருப்பு இருந்து வந்தது. இந்நிலையில் அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தொடர்ந்து நீர் திறந்து விடப்பட்டது.

மேலும் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் முற்றிலும் மழை நின்ற நிலையில், அணைக்கு நீர்வரத்து கடந்த 15 நாட்களாக முற்றிலும் இல்லாத நிலையில் அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து 91.84 அடியாக சரிந்துள்ளது.

தற்பொழுது அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் அணையின் நீர்மட்டம் 91.84 அடியாக உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாததால் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 25 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பருவம் தவறிய மழையால் 1.27 லட்சம் ஹெக்டேர் பயிர் பாதிப்பு - அமைச்சர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.