ETV Bharat / state

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை; வராக நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - பொதுப்பணித்துறை

Theni rain: பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழையால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

வராக நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 12:05 PM IST

தேனி: பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை, ஏற்கனவே அதன் முழுக் கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு உள்ளிட்ட ஆறுகளில் வரும் நீர் மற்றும் சோத்துப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், பெரியகுளம் வராக நதி ஆற்றில் கலந்து செல்வதால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் வராகநதி ஆற்றங்கரையோரம் பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், வராக நதி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.

இதையும் படிங்க: போக்குவரத்து தொழிற்சங்க வேலை நிறுத்தம்; தேனியில் இரவே பணிமனைக்கு திரும்பிய பேருந்துகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.