ETV Bharat / state

மொய் பணத்தில் மது குடித்த கணவன் கொலை..! மனைவி கைது

தேனி: ஆண்டிபட்டி அருகே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சுடுகாட்டில் பிணத்தை கைப்பற்றிய வழக்கில், 'மொய் பணத்தில் மது வாங்கி குடித்ததால் கணவனை கொலை செய்ததாக' மனைவி வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

மொய் பணத்தில் மது குடித்த கணவன் கொலை..! மனைவி கைது
author img

By

Published : May 29, 2019, 7:06 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார்(40). கூலித் தொழிலாளியான தனது மனைவி வீரமணி ஊரான கொத்தபட்டியில் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த மார்ச் 11ஆம் தேதி காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கொத்தபட்டியில் உள்ள அங்குராசு என்பவரின் தோட்டத்தில் மறுநாள் காலை உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து தகவலறிந்து வீரமணி அங்கு சென்றார். அதனையடுத்து, கணவரின் உடலை ஆட்டோவில் ஏற்றிகொண்டு கொத்தபட்டி சுடுகாட்டில் கொண்டு வந்து போட்டு விட்டு, இறுதி சடங்கு செய்வதற்காக பொருட்களை வாங்க சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் மயானத்தில் அனாதையாக பிணம் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின், விசாரணை செய்ய ஆரம்பித்தபோது, வீரமணி தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் காவல்துறையினர் ஒரு மாதம் கழித்து நேற்று வீரமணியை கைது செய்தனர். அதன் பின் நடத்திய விசாரணையில், அய்யனாரை திட்டமிட்டு கொலை செய்ததை அவர் ஒப்புகொண்டுள்ளார்.

மொய் பணத்தில் மது குடித்த கணவன் கொலை..! மனைவி கைது

அவர் அளித்த வாக்கு மூலத்தில், மது குடித்துவிட்டு அடிக்கடி என்னை அடித்துக்கொண்டிருந்தார். சம்பவத்தன்று ஒரு விஷேச நிகழ்ச்சிக்காக கொடுத்துவிட்ட மொய் பணத்தை, மொய் செய்யாமல் அய்யனார் மது வாங்கி குடித்து விட்டார். இதனால் வந்த கோபத்தில், மதுபோதையில் இருந்த அவரை கத்தியால் கழுத்தை அறுக்க முயற்சித்தேன். அவர் சாகாததால் கழுத்தை நெறித்து கொலை செய்தேன். என வீரமணி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு காவலில் உள்ள வீரமணியை விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப.பழனிக்குமார் - தேனி.            29.05.2019.

                ஆண்டிபட்டி அருகே கடந்த 2மாதங்களுக்கு முன் உடலில் காயங்களுடன் சுடுகாட்டில் பிணத்தை கைப்பற்றிய வழக்கில் திருப்பம். மொய் பணத்தில் மது வாங்கி குடித்ததால் ஆத்திரம், குடிகார கணவனை கொலை செய்த மனைவி கைது.

     தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார்(40). கூலித்தொழிலாளியான இவர் கடன் தொல்லையால், அவதிபட்டதையடுத்து தனது மனைவி ஊரான கொத்தபட்டிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியேறினார். அங்கிருந்து கடந்த மார்ச் 11ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை. இதனைத் தொடர்ந்து கொத்தபட்டி ஊருக்கு தெற்கே உள்ள அங்குராசு என்பவரின் தோட்டத்தில் மறுநாள் காலை உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து இறந்தவரின் மனைவி வீரமணி கணவரின் உடலை ஆட்டோவில் ஏற்றிகொண்டு கொத்தபட்டி சுடுகாட்டிற்கு கொண்டு வந்து போட்டு விட்டு, இறுதி சடங்கு செய்வதற்காக பொருட்களை வாங்க சென்றார். அந்த நேரத்தில் மயானத்தில் அய்யனார் பிணமாக கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு  வந்த இராஜதானி காவல்துறையினர், அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். உடலில் காயங்கள் இருந்ததால் அதனை கொலை என உறுதி செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளியை கடந்த இரண்;டு மாதமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் இறந்தவரின் மனைவி வீரமணி தலைமறைவானதால் அவர் மீது அதிகம் சந்தேகம் கொண்ட போலீசார் தலைமறைவாக இருந்தவரை பிடித்து விசாரித்த போது திடிக்கிடும் தகவல் வெளிவந்தது.

    விசாரணையில், இறந்த அய்யனாரை மனைவியே திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புகொண்டார். சம்பவத்தன்று ஒரு விஷேச நிகழ்ச்சிக்காக கொடுத்து விட்ட மொய்பணத்தை, மொய் செய்யாமல் மதுவாங்கி குடித்து விட்டதாகவும், அடிக்கடி மது குடித்துவிட்டு தன்னை தாக்கியதாகவும், இதனால் தான் திட்டமிட்டு முதலில் கத்தியால் பின் கழுத்தில் அறுத்து கொலை செய்ய முயற்சித்தேன். பின்னர் சாகாததால் கழுத்தை நெறித்து கொலை செய்தேன் என்றும், போலீசில் இருந்து தப்பிக்கவே இந்த நாடகம் ஆடினேன் என்றும்  மனைவி வீரமணி ஒப்புகொண்டார்.

   மொய்பணத்தில் மதுவாங்கி குடித்ததால் கணவனை மனைவியே திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_01_29_HUSBAND DEATH WIFE ARREST_VIS_7204333

2)      TN_TNI_01a_29_HUSBAND DEATH WIFE ARREST_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.