ETV Bharat / state

லட்சம் லட்சமாக கொள்ளையடிக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ் - தங்க தமிழ்ச்செல்வன் - சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்

தேனி: தேர்தலில் பொதுமக்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என முதலமைச்சரும் துணைமுதலமைச்சரும் நினைத்துக்கொண்டிருப்பதாக தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்துப் பேசினார்.

dmk
dmk
author img

By

Published : Dec 21, 2020, 9:30 PM IST

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் இன்று(டிச.21) தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக தேனியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்றார்.

முன்னதாக மதுரை சாலையில் பேண்டு வாத்தியங்களுடன் கேஸ் சிலிண்டரை பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், திமுகவினருக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சிலிண்டரை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

சிலிண்டருக்கு பாடை கட்டிய திமுக
சிலிண்டருக்கு பாடை கட்டிய திமுக

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன்:

தேனி - பங்களாமேடு பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியதாவது, "பிரதமராக வந்ததும் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் எனக் கூறிய மோடி அதனை நிறைவேற்றவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி பண மதிப்பிழப்பு செய்துவிட்டு, 2 ஆயிரம் ரூபாய் தாள்களை அச்சடித்தனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகள்:

ஊழல் பணத்தை பதுக்குவதற்கு வசதியாகத் தான் இந்த நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சமையல் எரிவாயு விலையை உயர்த்தி சாமானிய மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லியில் கடுங்குளிரிலும் 25 நாள்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தங்கதமிழ்செல்வன்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன்

லட்சம் லட்சமாக கொள்ளையடிக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்:

மாறாக இங்கிருந்துகொண்டு லட்சம், லட்சமாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்தால் ஓட்டு போட்டு வெற்றியடைந்து கொள்ளையடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: முன்கூட்டியே தேர்தலை சந்திக்க அதிமுக திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.