ETV Bharat / state

பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - பணி நீட்டிப்பு வழங்கக்கோரி ஆர்பாட்டம்

தேனி: கரோனா பெருந்தொற்று காலத்தில் பணி செய்த செவிலியர்கள் தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Dismissed nurses involved in an attention-grabbing demonstration in theni

author img

By

Published : Nov 30, 2020, 5:14 PM IST

தேனி மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செவிலியப் பட்டப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு படித்த 36 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் முதல் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், கரோனா சிறப்பு சிகிச்சை மையம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் அக்டோபர் மாத இறுதியில் பணியில் இருந்து விலக்கிக் கொள்வதாக சுகாதாரம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கோரி செவிலியர்கள் இன்று தேனியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற செவிலியர்கள், பெருந்தொற்றை கட்டுப்படுத்திய செவிலியராகளை போராடத் தூண்டாதே, பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கிடு உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த தாங்கள், அரசுடன் இணைந்து செயல்பட்டு வந்தோம். எங்களில் பலர் பணி காலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்ற பிறகும், தொடர்ந்து பணிபுரிந்து வந்தோம்.

ஆனால் தற்போது நோய்த்தொற்று குறைந்ததும் பணிநீக்கம் செய்த அரசின் இந்த அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு முன்பாக தனியார் மருத்துவமனைகளில் அவரவர் அனுபவத்திற்கு ஏற்ப பெற்று வந்த ஊதியத்தில் தற்போது மீண்டும் பணிக்கு சேர முடியாத நிலையில் உள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த நவம்பர் 2ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியரிடமும், நவம்பர் 11ஆம் தேதி சென்னையில் உள்ள சுகாதார துறை அலுவலகத்திலும் மனு அளித்துள்ளோம். ஆனால் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த அரசுடன் இணைந்து பணியாற்றிய எங்களை இந்தியாவில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு சுகாதார துறை பணிநீட்டிப்பு வழங்க ஆவன செய்ய வேண்டும் என்றனர். இல்லையென்றால் தொடர்ந்து போராடுவோம்" எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய செவிலியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.