ETV Bharat / state

எங்கள் கருத்து தர்மத்தின் கருத்து - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பு நேர்காணல்

போடிநாயக்கனூர் அதிமுக வேட்பாளரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பாக பரப்புரை செய்துவருகிறார். பரப்புரைக்கு இடையே, தொகுதியில் தான் செய்த பணிகள், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு, அமமுக, ஸ்டாலினின் விமர்சனங்கள் குறித்த தனது கருத்துகளை நமது ஈடிவி பாரத்திடம் பகிர்ந்துகொண்டார்.

deputy-cm-ops-special-interview
deputy-cm-ops-special-interview
author img

By

Published : Apr 1, 2021, 2:45 PM IST

Updated : Apr 1, 2021, 10:44 PM IST

தனது சொந்த தொகுதியான பெரியகுளம் தனித் தொகுதியானதிலிருந்து, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை தத்தெடுத்துக் கொண்டது போடிநாயக்கனூர் தொகுதி. அந்தத் தொகுதியை ஓபிஎஸ் தத்தெடுத்துக் கொண்டார் என்றால் அது மிகையல்ல.

சமுதாய வாக்குகள்தான் இதற்கான முதல் பிணைப்பு என்றாலும், அதைத் தாண்டிய புரிதலும் ஓபிஎஸ்ஸுக்கும் தொகுதிவாசிகளுக்கும் இடையில் இருப்பதை அவரது பரப்புரை உணர்த்துகிறது. இந்தப் பிணைப்பின் நம்பிக்கையில் மூன்றாவது வெற்றிக்காக மீண்டும் போடியில் போட்டியிடுகிறார் ஓ. பன்னீர்செல்வம்.

சொந்த வீட்டிற்கு வருவதுபோலவே இயல்பாகத் தொகுதிக்குள் நுழைகிறார். தன்னை வரவேற்க காத்திருக்கும் தொண்டர்களை இன்முகத்துடன் எதிர்கொள்கிறார். தனக்கு அணிவிக்க வரும் பொன்னாடைகளைத் தொண்டர்களுக்கே தன் கையால் அணிவித்து அதிமுகவில் கடைக்கோடி தொண்டனும் தலைவனாகலாம் என்ற அதிமுகவின் கொள்கையை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உலகறியவும் செய்கிறார்.

பரப்புரையில் கடந்த பத்தாண்டுகள், தொகுதிக்கு என்ன செய்தேன் என்பதைக் கூறி, பணிகளைத் தொடர மீண்டும் வாய்ப்பு கேட்கிறார் ஓபிஎஸ். இடைமறிக்கும் தொகுதிவாசிகள் விட்டுப்போன தங்கள் தேவைகளைச் சொல்ல அக்கறையுடன் அதனைக் கேட்டு, தேர்தலுக்குப் பின் தேவையைப் பூர்த்திசெய்வதாகச் சொல்கிறார். அந்த வாக்குறுதியில் தெரிகிறது வேட்பாளர்-தொகுதிவாசிகள் இருவர்களது நம்பிக்கை.

ஓபிஎஸ்

காலையில் தொடங்கி இரவு வரை நீளும் இந்தப் பரப்புரை பரபரப்புகளுக்கிடையில் நம் ஈடிவி பாரத்திடம் தேர்தல் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார் ஓபிஎஸ்.

பரப்புரை எளிமையான முறையில் இருக்கிறது. தொகுதியில் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது?

கடந்த பத்தாண்டு காலம் அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் போடி தொகுதிவாழ் மக்களால் வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. நீண்டநாள் கோரிக்கையான குரங்கனியிலிருந்து டாப் ஸ்டேஷன் வரை, முன்பு அங்கு ரோப் கார் சென்றது. அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. இப்போது தார்ச்சாலை கேட்டுள்ளனர். ரூ.330 கோடியில் தார்ச்சாலை அமைக்க அரசாணை பெறப்பட்டுள்ளது. நில எடுப்புக்காக 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்தச் சாலை தார்ச்சாலையாக மாறும்.

தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வருகின்றன. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் இயக்கம். இங்கு பல்வேறு கட்சிகள் தொடங்கப்பட்டாலும், அதனால் அதிமுகவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இந்தச் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அஇஅதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.

திமுக தலைவர் ஸ்டாலின் இங்கு பரப்புரை செய்தபோது, உங்களையும், ஓ.பி.ஆர்.யும், வன்னியர் இட உள் இடஒதுக்கீடு குறித்த உங்களின் கருத்துகளை விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து....

அவரவர்களுக்கு மனதில் தோன்றிய கருத்துகளைச் சொல்லக்கூடிய கருத்தாகத் தான் இருக்கிறது. எங்களுடைய கருத்து நியாயமான கருத்து தர்மத்தின் கருத்து.

Last Updated : Apr 1, 2021, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.