ETV Bharat / state

ஏ.சி. சண்முகம் விடுத்த 'அந்த' கோரிக்கை: 'உங்களில் ஒருவனாக இருந்து நான்...!' - ஓபிஎஸ் பதில் - bodi attend function ops

தேனி: வேளாளர் பிரிவில் மாற்று சமுதாயத்தினரைச் சேர்க்கும் நடவடிக்கையை அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என போடியில் நடைபெற்ற வ.உ.சி. சிலை திறப்பு விழாவில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் விடுத்த கோரிக்கைக்கு ஓபிஎஸ் பதிலளித்தார்.

போடியில் நடைபெற்ற வ.உ.சி சிலை திறப்பு விழாவில்

author img

By

Published : Feb 25, 2021, 1:33 PM IST

தேனி மாவட்ட ஐக்கிய பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் போடியில் நிறுவப்பட்டிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் திருவுருவ வெண்கலச் சிலையைத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று (பிப். 24) திறந்துவைத்து வ.உ.சி.யின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில் கலந்துகொண்ட புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேசுகையில், "உழைப்பால் உயர்ந்த உத்தமர், எளிமையின் அடையாளம், ஜெயலலிதாவால் மூன்றுமுறை முதலமைச்சராக அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ் பண்பின் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறார்.

கலியுகத்தில் தர்மராக வாழ்ந்துவருபவர் ஓபிஎஸ், அர்ஜுனராக இபிஎஸ். இருவரும் இணைந்து மகாபாரதத் தேர்தலை நடத்த இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்திச் செல்லும் கிருஷ்ணராகப் பிரதமர் மோடி இருப்பதால், வருங்காலத்தில் தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

மேலும், "தேவேந்திரகுலம், தேவேந்திர தேவமார் அல்லது கடவுள் என்றுகூட பெயர் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் தேவேந்திரகுல வேளாளர் என்று மட்டும் வேண்டாம். வேளாளர் என்பதை அரசு விலக்கிக்கொள்ள துணை முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மேடையிலேயே கோரிக்கைவிடுத்தார்.

அதனைத்தொடர்ந்து, பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், 'உங்களில் ஒருவனாக இருந்து நான்' என்றும், உங்களுடைய பிரச்சினைகள் (வேளாளர் பெயர் விவகாரம்) களைவதற்கு நானும் ஒருவனாக இருந்து கடமையாற்றுவேன் எனவும் பதிலளித்தார்.

இவ்விழாவில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத், பிள்ளைமார் சமுதாயத்தினர், அதிமுகவினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'இபிஎஸ், ஓபிஎஸ் ராமர் - லட்சுமணர் போன்றவர்கள்!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.