தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி, மருத்துவம், சுகாதாரம், நகராட்சி நிர்வாகம், வருவாய் உள்ளிட்ட ஐந்து துறையை சேர்ந்த முக்கிய அலுவலர்களுடன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
சுமார் மூன்றரை மணி நேரமாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண்தேஜஸ்வி, கம்பம் அதிமுக எம்.எல்.ஏ ஜக்கையன், பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதி திமுக எம்.எல்.ஏக்கள் சரவணக்குமார், மகாராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்கள் மனரீதியாக பாதிப்படையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள், குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா: வாட்ஸ்அப் எடுத்த முடிவால் பயனாளர்கள் அதிருப்தி