ETV Bharat / state

தேனி ஆட்சியரை இடமாற்றம் செய்யக்கோரி மா.கம்யூ கண்டன ஆர்ப்பாட்டம்! - demanding transfer of Theni Collector

தேனி  : கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில் தேனி ஆட்சியர் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

CPM protests demanding transfer of Theni  Collector
தேனி ஆட்சியரை இடமாற்றம் செய்ய கோரி சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம்!
author img

By

Published : May 29, 2020, 4:33 PM IST

கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியப்போக்குடன் செயல்படும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவை பணியிட மாற்றம் செய்திடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆட்சியருக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாகச் செயல்படுவதாகவும், கரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடுவதில் மாவட்ட நிர்வாகம், மருத்துவக் குழுக்களுக்கிடையே குளறுபடி தொடர்வதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாகப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ்வரன், “கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாகச் செயல்படுகிறது.

கரோனா கண்டறிதல் சோதனைகளை மேற்கொள்ள எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை வெளியிடுவதில் மாவட்ட நிர்வாகம், மருத்துவக்குழுக்களுக்கிடையே குளறுபடி நிலவுகிறது.

தேனி ஆட்சியரை இடமாற்றம் செய்யக்கோரி சி.பி.எம். கண்டன ஆர்ப்பாட்டம்!

மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நன்கொடை வழங்குபவர்களிடம் நேரடியாக நிதி, பொருள்களை வாங்காமல் உதவியாளர்களிடம் கொடுக்கச் சொல்வது என தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மக்கள் விரோத போக்கில் ஈடுபட்டுவருகிறார்.

தொடர்ந்து மக்கள் விரோதப்போக்கில் ஈடுபட்டுவரும் தேனி மாவட்ட ஆட்சியரை தமிழ்நாடு அரசு பணியிடை மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ”எனக் கோரிக்கைவிடுத்தார்.

இதையும் படிங்க : ஓசி சிகரெட் தராத டீ கடைக்கு தீ வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.