ETV Bharat / state

கோவிட்-19 விழிப்புணர்வு: அரசுடன் கை கோர்த்த காய்கனி சிற்பக்கலைஞர்! - காய்கனி சிற்பக்கலைஞர் இளஞ்செழியன்

தேனி : தேனியைச் சேர்ந்த காய்கனி சிற்பக்கலைஞர் பன்னாட்டு மொழிகளில் சிற்பம் செய்து நூதன விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டார்.

Covid-19 Awareness: fruit Sculptor who joined hands with Government
கோவிட்-19 விழிப்புணர்வு: அரசுடன் கை கோர்த்த காய்கனி சிற்பக்கலைஞர்!
author img

By

Published : May 3, 2020, 3:31 PM IST

உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் இந்தியாவிலும் தீவிரமாக பரவிவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பெருந்தொற்றால் 2 ஆயிரத்து 757 பேர் பாதிக்கப்பட்டும், 29 பேர் உயிரிழந்தும் உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. பள்ளி-கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் தொடர்ந்து மூடிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை என அனைத்துத் துறைகளும் ஈடுபட்டுவருகின்றன. இதில் தன்னார்வலர்களும் இணைந்து தம்மாலான பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.

எனினும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் சந்தைகள் கடைகளில் அதிக அளவு பொருள்களை வாங்க குவிந்து வருவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் குறித்து தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த காய்கனி சிற்பக்கலைஞர் இளஞ்செழியன், பல்வேறு நாட்டு மக்களின் மொழிகளில் காய்கனிகளில் சிற்பம் செய்து நூதன வகையில் விழிப்புணர்வை மேற்கொண்டார். தர்பூசணி பழங்களில் சிற்பம் செதுக்கியுள்ளார்.

இத்தாலி, சீனா, மலாய், தாய்லாந்து, அரேபியா, ஜப்பான், ஜெர்மனி, பிரெஞ்சு, வியட்நாம், இந்தோனேசியா, மியான்மார், ரஷ்யன், சிங்களம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 14 வெளிநாட்டு மொழிகளும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் கரோனா நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு வாசகங்களை செதுக்கியுள்ளார்.

கோவிட்-19 விழிப்புணர்வு: அரசுடன் கை கோர்த்த காய்கனி சிற்பக்கலைஞர்!

இதுகுறித்து காய்கனி சிற்பக்கலைஞர் இளஞ்செழியன் கூறுகையில், “மொழியால், இனத்தால், மதத்தால் வேறுபட்டிருந்தாலும் இந்த நோயினால் உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்த கருத்தோடு இந்த தொற்று நோயினை இவ்வுலகில் இருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஒன்றுபட்டால் வெற்றி மக்களுக்கே என்பதை உணர்த்தவே தர்பூசணி பழம் கொண்டு இந்த விழிப்புணர்வு சிற்பங்களைச் செதுக்கியுள்ளேன்”என தெரிவித்தார்.

இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க : மதுரை காமராசர் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் பதவி விலகல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.