ETV Bharat / state

அருகாமை கிராமத்தில் கரோனா - தானாக முன் வந்து முழு அடைப்புகோரிய கிராம மக்கள்! - theni district news in tamil

தேனி: அருகாமையில் அமைந்திருக்கும் கிராமத்தில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு இருப்பதால், தங்களுடைய கிராமத்தில் முழு அடைப்புக்கு அனுமதி வழங்கிட மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

அருகாமை கிராமத்தில் கரோனா: தானாக முன் வந்து முழு அடைப்பு கோரிய கிராம மக்கள்!

author img

By

Published : May 10, 2020, 6:46 PM IST

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பூதிப்புரம் கிராமத்தில் வரும் மே-17ஆம் தேதி வரையில் கடைகள் அனைத்தும் திறக்கப்போவதில்லை என கிராம கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து பூதிப்புரம் கிராம கமிட்டியினர் கூறுகையில், 'கரோனாவிலிருந்து எங்களைத் தற்காத்துக் கொள்ள அரசு கூறிய அறிவுரைப்படி, அனைவரும் வீட்டிலேயே இருந்து வந்தோம். மேலும் கிராம கமிட்டி சார்பில் ஊர் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு, வெளியூர் நபர்கள் நுழையாதவாறு சோதனைச் சாவடிகள் அமைத்தோம். இரவு, பகலாக கண்காணித்து வந்தோம்.

அருகாமை கிராமத்தில் கரோனா: தானாக முன் வந்து முழு அடைப்பு கோரிய கிராம மக்கள்!

இந்நிலையில், நேற்று எங்கள் ஊருக்கு அருகில் உள்ள மாரியம்மன் கோவில்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அந்தக் கிராம மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு எங்கள் ஊருக்குத்தான் அதிகம் வருகின்றனர். இதனால், கரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் உள்ளதால், வரும் மே-17ஆம் தேதி வரையில், பூதிப்புரம் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்படுவதாக ஊர் கிராம கமிட்டி சார்பில் முடிவு செய்துள்ளோம்.

இதற்கு பொதுமக்களும் ஆதரவளித்துள்ளனர். மேலும் எங்களது கோரிக்கைக்கு அனுமதி வழங்கிச் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பாதுகாப்பு வழங்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளோம்' என்றார்கள்.
இதையும் படிங்க: பொருளாதாரம் பாதிப்பு குறித்து ஆராய உயர்நிலைக் குழு அமைப்பு - ஸ்டாலின் வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.