தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று (ஜூலை 24) ஒரே நாளில் 6 ஆயிரத்து 785 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 234 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,321 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் மாவட்டத்தில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1,694 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருவது தேனி மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.