வரும் 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தொடர்பாக, தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கம்பம் பகுதியில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத் பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், நரேந்திர மோடி அரசின் புதிய வேளாண் சட்டத்தால் மோடியின் நண்பர்களான அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்கள் தான் பயனடைவார்கள்.
விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படையக்கூடும் என்பதால் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மருத்துவ இடஒதுக்கீட்டில் 7.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் பாஜகவின் தூண்டுதலால் வேண்டுமென்றே ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார்.
ஏழை எளியோர்களின் நலன் கருதி இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்காமல், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் தயங்கி வருகிறது. அதிமுக அரசை மத்திய பாஜக அரசு பின்னால் இருந்து இயக்குகிறது. இதற்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். வரும் 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:7.5% உள் ஒதுக்கீடு - மசோதாவிற்கு பதில் சட்டம் இயற்ற வல்லுநர்கள் யோசனை!