ETV Bharat / state

வைகை அணையில் மத்திய நீர்வள குழுவினர் ஆய்வு! - மத்திய நீர்வளக்குழுவினர் ஆய்வு

தேனி: 13 ஆண்டுகளுக்குப் பிறகு முழுக்கொள்ளளவை எட்ட உள்ளதால் மத்திய நீர்வள குழுவினர் வைகை அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.

central-water-resources-committee-inspects-vaigai-dam

author img

By

Published : Jan 21, 2021, 10:55 AM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூலவைகை ஆறு, முல்லைப் பெரியாற்றில் இருந்து வரும் நீர்வரத்தால் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கியது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் (ஜனவரி 19) அணையின் நீர்மட்டம் 70.20 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,296 கன அடி வந்து கொண்டிருக்கிறது.13 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணை அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்ட உள்ளதால் அணையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மத்திய நீர்வளக் குழுவினர் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

மத்திய நீர்வளத்துறை இயக்குநர் நித்தியானந்த ராய், இணை இயக்குநர் இசாலி ஐசக் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். கனமழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகமாகும் பட்சத்தில் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற மதகுகள் போதுமானதாக உள்ளதா? கூடுதல் மதகுகள் அமைக்கலாமா? என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.

வைகை அணையில் மத்திய நீர்வள குழுவினர் ஆய்வு

இதையடுத்து, வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூலவைகை ஆறு, வருசநாடு வனப்பகுதி, மேகமலை வனப்பகுதி, பெரியார் ஆறு உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு நடத்தினர்.

இதையும் படிங்க: 'முதலமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராடுவோம்' - திமுக எம்எல்ஏ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.