ETV Bharat / state

இந்திய நறுமண வாரிய ஊழியர்களுக்குக் கரோனா: ஏலக்காய் வர்த்தகம் ரத்து

author img

By

Published : Jul 20, 2020, 7:18 PM IST

தேனி: போடியில் உள்ள இந்திய நறுமண வாரிய ஊழியர்களுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதால் அலுவலகம் மூடப்பட்டதை அடுத்து ஏலக்காய் வர்த்தகம் ரத்து செய்யப்பட்டது.

இந்திய நறுமண வாரியம்
இந்திய நறுமண வாரியம்

தேனி மாவட்டம், போடியில் மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் இந்திய நறுமண வாரியம் அமைந்துள்ளது. கேரள – தமிழ்நாடு விவசாயிகளால் விளைவிக்கப்படும் ஏலக்காய்கள் இங்கு கொண்டு வரப்பட்டு இனையதளம் வாயிலாக ஏலம் நடைபெறும்.

இந்த ஏல வர்த்தகத்தில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு – கேரள விவசாயிகள், வியாபாரிகள் ஏராளமானோர் பங்கேற்பர். கரோனா நோய்த் தொற்றால், கடந்த மார்ச் முதல் ஏல வர்த்தகம் தடை செய்யப்பட்டது.

இதன் காரணமாக ஏலக்காய் தேக்கமடைந்ததால் போடியில் உள்ள ஏல மையத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, கடந்த சில வாரங்களாக ஏல வர்த்தகம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் போடி நறுமன வாரியத்தில் பணிபுரிந்து வரும் 2 ஊழியர்களுக்கு இன்று (ஜூலை 20) கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் 50 வயது மதிக்கத்தக்க காவலர், கணிப்பொறி பணியாளர் (29) ஆகிய இருவருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, போடி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, இந்திய நறுமன வாரிய அலுவலகத்தைத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, இன்று ( ஜூலை 20) முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை திறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கு நடைபெற்று வந்த ஏலக்காய் வர்த்தகமும் ரத்து செய்யப்பட்டு, விவசாயிகள், வியாபாரிகள் யாரும் நறுமண வாரியத்திற்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்கள் மற்றும் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இந்திய நறுமன வாரிய அலுவலகம் மூடப்பட்டதால், மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏலக்காய்கள் தேக்கமடையும் சூழல் உருவாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.