ETV Bharat / state

கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற இளைஞர் கைது! - தேனியில் கஞ்சா கடத்திய இளைஞர்

தேனி: தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு 10.5 கிலோ கஞ்சா கடத்த முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கஞ்சா கடத்த முயன்ற இளைஞரை கைது செய்த காவல் துறையினர்
author img

By

Published : Nov 19, 2019, 11:40 PM IST

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கஞ்சா கடத்துவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் கஞ்சா விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்கள் விபரங்களை சேகரித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், குமுளி தேசிய நெடுஞ்சாலையில், கூடலூர் காவல் துறையினர் ரோந்து சென்றபோது செல்வபுரம் விலக்கில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரை அழைத்து விசாரித்தனர்.

கஞ்சா கடத்த முயன்ற இளைஞரை கைது செய்த காவல் துறையினர்

அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 10.5 கிலோ கஞ்சா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர்,காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த ஒச்சு என்பவரின் மகன் வைரமுத்து (32) என்பதும், கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதற்காக சென்றதாகவும் தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த கூடலூர் காவல் துறையினர் வைரமுத்துவை கைது செய்து, அவரிடமிருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க : குமரியிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

Intro:         தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்றவர் கைது. ரூ. 3லட்சம் மதிப்புள்ள 10.5 கிலோ கஞ்சா பறிமுதல். காவல்துறையினர்; விசாரணை.
Body:         தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கஞ்சா கடத்துவது தொடர் கதையாகவே உள்ளது. இதனையடுத்து தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள் விபரங்களை சேகரித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார்.
         இந்நிலையில் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூடலூர் காவல்துறையினர் ரோந்து சென்ற போது செல்வபுரம் விலக்கில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த வாலிபரை அழைத்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக அவர் பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்த போது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்;துறையினர் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த ஒச்சு என்பவரின் மகன் வைரமுத்து (32) எனவும், கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதற்காக சென்றதாகவும் தெரிய வந்ததது.
Conclusion: இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கூடலூர் காவல்துறையினர் வைரமுத்துவை கைது செய்து, அவரிடம் இருந்த சுமார் 3லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
         
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.