9 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பேருந்து போக்குவரத்து - bus in theni
தேனி: கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகத் தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியான குமுளி இடையே ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று (ஜன. 06) முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது.
கரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த மார்ச் முதல் மாநில எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. இதனால் தமிழ்நாடு – கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திலிருந்து குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு ஆகிய மலைச்சாலைகளில் பொதுப் போக்குவரத்திற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் தேனியிலிருந்து, குமுளிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன. ஆனால் தேனி வழியாக கேரளாவிற்குச் செல்பவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் என அனைவரும் இ -பாஸ் அனுமதி பெற்றுச் சென்றுவந்தனர்.
பிறகு பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த டிசம்பர் 24ஆம் தேதிமுதல் குமுளி மலைச்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் குமுளியில் 10 நாள்களாக நடைபெற்றுவந்த பராமரிப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்தது.
இதையொட்டி குமுளிக்கு, தேனி மாவட்டத்திலிருந்து இன்று(ஜன. 06) முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல் கம்பம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குமுளிக்குத் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஏலக்காய் திருட்டு!