ETV Bharat / state

தேனியில் பெரியார் பிறந்தநாள் கொண்டாட பாஜக எதிர்ப்பு

தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 17, 2022, 5:31 PM IST

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள காந்தி சிலை அருகே பெரியார் பிறந்த நாளை கொண்டாட அனுமதிக்க மாட்டோம் என்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காந்தி சிலை அருகே பெரியாரின் உருவப்படத்திற்கு திராவிடர் கழகத்தினருடன் திமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் மரியாதை செலுத்த முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‌ காந்தி சிலை உள்ள இடமானது, கோயிலுக்கு சொந்தமானது என்றும், அவ்விடத்தில் பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடக்கூடாது என்றும் கோசங்களை எழுப்பினர்.

அப்போது இரு தரப்பினரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்ததால், அவர்களை கைது செய்தனர்.

பெரியார் பிறந்தநாள் கொண்டாட பாஜவினர் எதிர்ப்பு

இதையும் படிங்க: கடமையைச் செய்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை - பல்டி அடித்தாரா பன்னீர்செல்வம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.