தேனி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலா தலங்களாக சுருளி அருவியும் கும்பக்கரை அருவியும் உள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், இரு அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளிஅருவியில் குளிப்பதற்கு 3ஆவது நாளாகவும், கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு 30ஆவது நாளாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த அருவிகளுக்கு ஆசையோடு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றாத்தோடு திரும்பிச் செல்கின்றனர். மேலும் தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது.
இதையும் படியுங்க:
தீபாவளியை மணமணக்க வைக்கும் ராசிபுரம் நெய்! புவிசார் குறியீடு கிடைக்குமா?