தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தும், அருவிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட கனமழை காரணமாக அருவிக்கு வரும் நீர்வரத்து சற்று அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுருளி அருவிக்கு தினம்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கற்கள், பாறைகள் விழும் அபாயம் இருப்பதாலும் அருவியில் வரும் நீரின் வேகம் அதிகரித்து வருவதாலும், சுற்றுலாப் பயணிகள் குளிக்க பாதுகாப்பான சூழல் இல்லாத காரணத்தால் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
அருவியில் நீர் வரத்து குறைந்து சீரான பிறகே சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கபடுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெரியகுளம் சுற்றுவட்டாரப்பகுதியில் முதல் கட்ட உழவுப்பணிகளைத் தொடங்கிய விவசாயிகள்