ETV Bharat / state

அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி - அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி

தேனி: அய்யம்பட்டியில் வரும் 7ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

precaution meeting
ஆலோசனைக் கூட்டம்
author img

By

Published : Feb 3, 2021, 11:02 PM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் உள்ள ஸ்ரீ ஏழைகாத்தம்மன், ஸ்ரீவல்லடிகாரசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி நடத்த விழாக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகாயினி மற்றும் அய்யம்பட்டி கோயில் விழாக்குழுவினர் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் கூறுகையில், ’ஜல்லிக்கட்டு நடத்த உள்ள அமைப்பினர்கள், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு குழுவினரிடம் எழுத்து பூர்வமான அனுமதியையும், போட்டியில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் நபர்களுக்கான அனுமதியையும் பெறவேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும். 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டி நடைபெறும். ஒவ்வொரு 75 நிமிடத்திற்கும் 50 மாடுபிடி வீரர்கள் வீதம் அனுமதிக்கப்படுவர்.

போதை மருந்துகள் மற்றும் வெறியூட்டும் பொருள்களை எவ்வடிவத்திலும் தரக்கூடாது. இதனை கால்நடை மருத்துவர்கள் நிக்கோட்டின் சோதனை, கோகைன் சோதனை மற்றும் இதர சோதனைகள் மூலம் உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள பகுதியில் கண்டறியப்பட்டுள்ள 38 கிணறுகளை சுற்றி பாதுகாப்பு வளையங்கள் அமைத்து, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த திருப்பரங்குன்றம் கோயில் யானை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.