முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை என்பது இன்றுவரை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஏழு பேர் விடுதலை குறித்து தமிழகம் முழுவதும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.
![undefined](https://s3.amazonaws.com/saranyu-test/etv-bharath-assests/images/ad.png)
கோவையில் துவங்கிய இந்த ஆதரவு கேட்பு கூட்டம் இன்று தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. தேனியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கதிர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஏழு பேர் விடுதலை செய்ய கவர்னர் கையெழுத்து இல்லை என்றால் பதவி விலகு என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் ஏந்தியவாறு ஏழு பேர் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது.
![undefined](https://s3.amazonaws.com/saranyu-test/etv-bharath-assests/images/ad.png)
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள் கூறுகையில்,
எந்த தவறும் செய்யாமல் 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஏழு பேர் விடுதலையில் மாநில அரசு மற்றும் ஆளும் அரசுகள் விடுதலை செய்யலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் முடித்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆளுநரிடம் என் மகன் விடுதலையானால் திருமணம் செய்து வைப்பதாக இருக்கிறது. எனவே விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அப்படி இருந்தும் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பதும் தெரியவில்லை. விடுதலைக்காக போராட்டம் நடத்தப் போவதில்லை. தொடர்ந்து மக்களை சந்தித்து நியாயம் கேட்க உள்ளேன் என்று தெரிவித்தார்.