ETV Bharat / state

Arikomban Elephant: ஆட்டம் காட்டிய அரிக்கொம்பனை பிடித்த வனத்துறை.. கம்பத்தில் 144 தடை நீக்கம்!

author img

By

Published : Jun 5, 2023, 8:23 AM IST

Updated : Jun 5, 2023, 11:01 AM IST

தேனி கம்பம் நகரில் புகுந்து தொடர் அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் காட்டு யானையை சின்ன ஓவுலாபுரம் மலையடிவாரப் பகுதியில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனிடையே கம்பம் பகுதியில் 144 தடை நீக்கப்பட்டுள்ளது.

தொடர் அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் பிடிபட்டது!

ஆட்டம் காட்டிய அரிக்கொம்பனை பிடித்த வனத்துறை!

தேனி: மூணாறு பகுதிகளில் தொடர் அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி 4 கும்கி யானையின் உதவியுடன் பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் வனத்துறையினர் கொண்டு வந்து விட்டனர். அங்கிருந்து தமிழ்நாட்டின் வனப் பகுதிக்கு இடம் பெயர்ந்த யானை மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது.

மேலும், கடந்த 27-ஆம் தேதி காலை கம்பம் நகர் பகுதிக்குள் திடீரென உலா வந்த அரிக்கொம்பன் யானை, அங்கிருந்த பொதுமக்களை விரட்டி அச்சுறுத்தியது. அதனைத் தொடர்ந்து யானையால் பொதுமக்களுக்கும், பொதுமக்களால் யானைக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு கம்பம் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களின் நிலை வேலையின்றி கவலைக்கிடமானது. இதனால் அரிகொம்பனை பிடிக்கும் படியில் வனத்துறை தீவிரமாக செயல்பட்டு வந்தனர். மேலும், யானையின் கழுத்தில் பொருத்தப்பட்ட ரேடியோ காலர் கருவி மூலம் அரிக்கொம்பனை தீவிரமாக வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இதையும் படிங்க: அரிக்கொம்பனால் தோட்ட வேலைகளுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு!

இந்நிலையில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உலா வந்த அரிசி கொம்பன் யானை, காமய கவுண்டன்பட்டி அருகே உள்ள சண்முகா நதி அணையில் நின்று கொண்டிருந்தது. இந்த தகவல் அறிந்து யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு (ஜூன் 4) அரிசி கொம்பன் யானை சின்ன ஓவுலாபுரம் அருகே உள்ள பெருமாள் கோவில் மலைப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளது.

யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க ஏதுவான இடமாக இருப்பதால் அதன் முன்னேற்பாடாக கம்பம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து கும்கி யானைகள் சின்ன ஓவுலாபுரம் பெருமாள் கோவில்
வனப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும், ஜே.சி.பி இயந்திரம் மற்றும் பொக்லைன் இயந்திரத்தையும் உடன் வனத்துறையினர் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் கும்கி யானைகள் லாரிகளில் கொண்டு சென்றதையடுத்து கம்பம், காமய கவுண்டன்பட்டி, ராயப்பன் புரட்டி பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தொடர் தீவிர முயற்சியால் தற்போது அரிக்கொம்பன் யானையை கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வாகனத்தில் ஏற்றி மாற்று இடத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது. கம்பம் நகர் பகுதியில் திரண்டிருந்த மக்கள் ஆரவாரமாக யானையை வழியனுப்பி வைத்தனர்.

மேலும் பிடிக்கப்பட்ட அரிகொம்பன் யானையை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளிமலை பகுதிகளில் விடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. யானையின் துதிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் முதற்கட்டமாக காயத்திற்கு சிகிச்சை அளித்த பிறகு எந்த வனப்பகுதியில் விடுவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

கம்பத்தில் 144 தடை நீக்கம்:

இதனிடையே, கடந்த 27-ஆம் தேதி கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நீக்கப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா அறிவித்துள்ளார்.

Last Updated : Jun 5, 2023, 11:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.