கரோனா வைரஸ் தற்போதுதான் சமூகப் பரவல் நிலையை எட்டி, தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் இதுவரை கரோனா இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி அருகே உள்ள டி. சேடப்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது லாரியில் ஆண்டிபட்டியில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் ஏற்றிச்சென்று வந்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். மேலும் அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், என நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் சுகாதாரத் துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், டி. சேடப்பட்டியில் அவர் வசித்து வந்த குடியிருப்புப் பகுதிகள், தெருக்கள் மற்றும் கிராமத்தின் எல்லைகள் என அனைத்தும் தடுப்புகளால் மூடப்பட்டுள்ளது. இதனால் அக்கிராமத்தில் பதட்டம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க : எவன்டா அது... அடச் சீ கம்முனு இரும்மா... மக்களை தரக்குறைவாக திட்டிய வட்டாட்சியர்!