சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த ஜனவரி 27ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டார்.
சிறையிலிருந்த சசிகலாவுக்கு கரோனா நோய்த்தொற்று உண்டானதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். பின்னர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தற்போது அவர் பெங்களூருவில் மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமையில் உள்ளார். பிப்ரவரி 8ஆம் தேதி காலை அவர் பெங்களூருவிலிருந்து தமிழ்நாடு வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இதனிடையே சசிகலாவை வரவேற்று தமிழ்நாட்டில் நாள்தோறும் அவரது தொண்டர்கள் சுவரொட்டிகளை ஒட்டிவருகின்றனர். இந்நிலையில் சசிகலாவிற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு காவல் துறைக்கு தேனி மாவட்ட அதிமுக நிர்வாகி சாந்தகுமார் என்பவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து சாந்தகுமார் கூறுகையில், "சசிகலா தலைமையின்கீழ் அதிமுக ஒருங்கிணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து வெற்றிபெற வேண்டும். 100 ஆண்டுகள் ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சசிகலா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவார்- டிடிவி தினகரன்