ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் பாலசமுத்திரம் வாக்குச்சாவடியை பார்வையிட வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், "முறையாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று எந்தக் கட்சியும் கோரவில்லை. முதல்நாள் 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, மறுநாள் இரண்டு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த அறிவிப்பு வெளியாகிறது. யார் மூலமாக இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது என்பதை ஊடகங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் ஆளுங்கட்சியினர் 2,000 பேரை வரவழைத்து அராஜகத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். அதனால் அன்றைய நாளில் பாதுகாப்பை அதிகரித்து அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளேன்.
மேலும், தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் அதிமுக ஆட்சியை அகற்றுவதற்காக சட்டப்பேரவையில் வாக்களிப்போம்" எனக் கூறியுள்ளார்.