திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அமீர். அழகுக்கலை நிபுணரான இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டு, தேனியில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். தேனி - அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகே இருவரும் வசித்து வரும் நிலையில், அமீரின் மனைவி தற்போது ஐந்து மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வருமானமின்றி வறுமையில் கணவன்- மனைவி இருவரும் தவித்து வந்துள்ளனர். இதனையறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், இந்த தம்பதியினருக்கு நிதியுதவி அளித்துள்ளனர்.
தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் லெப்ட் பாண்டி ரூ. 5 ஆயிரம் பணத்தை இன்று நேரடியாக சென்று, அந்த தம்பதியினருக்கு வழங்கியுள்ளார். மேலும் அவர் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்குமானால், இஸ்லாமிய சமுதாயப்படி அப்பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியையும் விஜய் மக்கள் இயக்கமே நடத்தும் என்றும் உறுதியளித்து ஆறுதல் கூறியுள்ளார்.
வறுமையில் வாடி வரும் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய விஜய் ரசிகர்களின் செயல், தேனி மாவட்ட மக்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.
இதையும் படிங்க...நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள்