ETV Bharat / state

"ஒரு நாள் அனைவரும் சேர்ந்து சுற்றுலா போவோம் என சொன்னார்" - நடிகர் மாரிமுத்துவின் நண்பர் வருத்தம்! - actor marimuthu with friends

Actor G Marimuthu: சென்னையில் மாரடைப்பால் உயிரழந்த நடிகரும், இயக்குநருமான மாரிமுத்துவின் நண்பர் தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

மாரிமுத்துவின் நண்பர் பகிர்ந்து கொள்ளும் நினைவுகள்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 8:47 PM IST

மாரிமுத்துவின் நண்பர் பகிர்ந்து கொள்ளும் நினைவுகள்..!

தேனி: பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி, திரைப்பிரபலங்கள், சின்னத்திரைப் பிரபலங்கள் என பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் மறைந்த மாரிமுத்துவின் பால்ய நண்பர் பசும்பொன், மாரிமுத்துவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தபோது நண்பர்களாக சேர்ந்து சுற்றுலா சென்று வருவோம் என்று கூறியபோது, தற்போது பிஸியாக இருப்பதால் ஒருநாள் சொல்கிறேன், அப்போது செல்லலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றார் ஆனால், அதற்குள் இப்படி ஆகிவிட்டது” என கூறினார்.

மேலும், “அவர் சிவகாசியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் காலத்தில், பெரியகுளத்தில் இளையராஜா கச்சேரி நடைபெற்றது. அதை பார்ப்பதற்காக அழைத்துச் செல்வார். பின்னர் அங்கிருந்து கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்வார். அப்போது தனக்கு வேலைக்கு செல்வதில் ஆர்வம் இல்லை, சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்று அப்போதே எங்களிடம் கூறுவார்.

இப்போது இரண்டு மாதங்களுக்கு முன்புகூட பள்ளி நிகழ்ச்சிக்காக சொந்த ஊருக்கு வருகை தந்திருந்தார். அப்போது அவருடன் நன்றாக பேசி மகிழ்ந்தோம். நல்ல கலகலப்பாக பேசக்கூடியவர். அப்போது சுற்றுலா செல்வோம் என்று கூறினேன். அதற்கு தற்போது பிஸியாக இருப்பதாகவும், ஒரு நாள் சொல்கிறேன், அப்போது அனைவரும் சேர்ந்து செல்வோம் என்று கூறினார். ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டது" என வேதனை தெரிவித்தார்.

இவர் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக பணிபுரிந்து, பின்னர் மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல இயக்குநர்களின் படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களையும் இயக்கினார். தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்' திரைப்படத்தில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்.

தற்போது இந்தியன் 2, கங்குவா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நிலையில், கடைசியாக இவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ஜெயிலர் படம் வெளியாகி உள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடரில் இவர் பேசும் வசனங்கள், குறிப்பாக "இந்தாம்மா ஏய்.." என கூறும் வசனம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி இருந்தது.

அதனையடுத்து சென்னையில் உள்ள தனது இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த மாரிமுத்துவின் உடலுக்கு திரைப்பிரபலங்கள், சின்னதிரை நடிகர்கள், திரைப்பட இயக்குநர்கள் என பலர் இறுதி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனியை அடுத்த பசுமலைத் தேரியில் இறுதிச் சடங்குகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையும் படிங்க: நடிகர் மாரிமுத்து மறைவு; தேனி அருகே சொந்த ஊரில் உடல் தகனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.