ETV Bharat / state

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மஞ்சளாறு அணையில் தண்ணீர் திறப்பு! - விவசாயிகளின் கோரிக்கை

தேனி: ஆயக்கட்டு பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மஞ்சளாறு அணையிலிருந்து, மூன்று நாள்கள் தண்ணீர் திறப்பதாக பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.

acceptance-of-the-formers-request-of-opening-of-water-in-the-manjalar-dam

author img

By

Published : Mar 14, 2020, 9:26 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது மஞ்சளாறு அணை. 57.5 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தேனி, திண்டுக்கல் ஆகிய இரு மாவட்ட மக்களின் குடிநீர் வசதியையும் விவசாயிகளின் பாசன வசதியையும் பூர்த்தி செய்கிறது. கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான தலையாறு, கொடைக்கானல் மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இன்றி காணப்படுகிறது.

மேலும் இரு மாவட்டங்களின் பாசனத் தேவைக்காகத் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், அணையின் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து, தற்போது 38.45 அடியாக சரிந்துள்ளது. இதனிடையே பாசனத் தேவைக்காகத் திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டதால் மஞ்சளாறு அணையின் மூலம் பாசன வசதி அடையும் பழைய ஆயக்கட்டு பகுதிகளும், புதிய ஆயக்கட்டு பகுதிகளிலும் நடைபெற்றுவரும் நெல் சாகுபடிக்கு நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

பருவ நிலை மாற்றத்தால் தாமதமாக உழவுப்பணிகளை மேற்கொண்ட அப்பகுதி விவசாயிகளுக்கு விளைவித்த பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து, கருகும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அறுவடை வரை சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை அணையிலிருந்து வழங்க வேண்டும் எனவும் பொதுப்பணித் துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மஞ்சளாறு அணையில் தண்ணீர் திறப்பு

அதனடிப்படையில் இன்று முதல் 3 நாள்களுக்கு பழைய ஆயக்கட்டு பகுதிக்கு 20 கன அடியும், புதிய ஆயக்கட்டு பகுதிக்கு 5 கன அடி நீரும், மஞ்சளாறு அணையிலிருந்து திறந்துவிடப்படுகிறது என பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. இந்தத் தண்ணீர் திறப்பால் மஞ்சளாறு அணையின் மூலம் பாசன வசதியடையும் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:குமரியில் 10 ரூபாய்க்கு சிக்கன் 65 - கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.