ETV Bharat / state

விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கியதில் முறைகேடு - டிராக்டர் வழங்கலில் முறைகேடு

தேனி: வேளாண் பணிகளுக்காக அரசு சார்பில் உழவர் குழுவிற்கு இயந்திரங்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக விவசாயிகள் புகாரளித்தனர்.

farmers
farmers
author img

By

Published : Jul 31, 2020, 10:26 AM IST

தேனி மாவட்டம் உழவர் உற்பத்தியாளர்கள் குழு -3 என்ற விவசாய அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு குழுவிற்கு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை மூலம் விவசாய பயன்பாட்டிற்காக இந்த உழவர் குழு வாயிலாக இயந்திரம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், "கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்ரீரெங்கபுரம் உழவர் ஆர்வலர் குழுக்களுக்காக வேளாண் துறை சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டுள்ளது. இது குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் ஒரு சில முக்கிய நிர்வாகிகள் மட்டும் பெற்றுக் கொண்டனர். இதனை மற்ற விவசாயிகளுக்கு தெரியப்படுத்தாமல், தனி நபர் ஒருவர் மட்டும் தனது சொந்த தேவைக்கு டிராக்டரை பயன்படுத்தி வருகிறார்.

ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்

அவரிடம் கேட்டதற்கு இந்த டிராக்டர் தனக்கு சொந்தமானது, வாகனத்தில் தனது பெயர் எழுதி இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். மேலும், இந்த டிராக்டரை மற்றவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 700 ரூபாய் வீதம் வாடகைக்கு விட்டும் பணம் சம்பாதித்து வருகிறார். வேளாண் அலுவலர்களிடம் கேட்டதற்கு மேற்படி டிராக்டர் ஸ்ரீரெங்கபுரம் உழவர் குழுவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கின்றனர்.

அரசியல் பின்புலம் இருப்பதால் அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க அலுவலர்கள் தயங்குகின்றனர். எனவே ஏழை விவசாயிகள் பயன்படும் நோக்கில் அரசு சார்பில் வழங்கப்படும் டிராக்டர் முறைகேட்டில் உரிய நடவடிக்கை எடுத்து உழவர் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று படைப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்த அரசு சார்பில் வழங்கப்பட்ட மருந்துப் பொருள்கள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக விவசாயிகள் புகார் மனு அளித்தனர். ஆதார் மற்றும் பட்டா நகல்கள் வாங்கிச் சென்று தற்போது வரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வில்லை. இதில் நிலமற்றவர்களுக்கும் பணம் வழங்கியுள்ளனர். அதற்கும் கமிஷன் வாங்கி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் புகார்

இது குறித்து அலுவலர்களிடம் கேட்டால் எந்த பதிலும் தராமல், விவசாயிகளை அரசு அலுவலர்கள் மிரட்டுவதாகவும், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் பெற்றுத் தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பிளஸ் 1 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.