ETV Bharat / state

சொத்தை அபகரிக்க காவல் ஆய்வாளர் முயற்சி?... தேனியில் பெண் பரபரப்பு புகார்! - complaint against police inspector in theni

தேனியில் தனக்கு சேர வேண்டிய சொத்தை சகோதரியின் கணவரான காவல் ஆய்வாளர் அபகரிக்க முயற்சிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

complaint against police inspector for land issue in theni
சொத்தை அபகரிக்க காவல் ஆய்வாளர் முயற்சி
author img

By

Published : Jul 25, 2023, 12:37 PM IST

சொத்தை அபகரிக்க காவல் ஆய்வாளர் முயற்சி?... தேனியில் பெண் பரபரப்பு புகார்

தேனி: கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த கணேஷ்குமார் மற்றும் சரிதா தம்பதியினர் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். சரிதாவின் பெற்றோர்கள் சோழவந்தான் கருப்பாயி ஆகியோருக்கு சரிதா மற்றும் முருகேஸ்வரி என 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கருப்பாயி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காலமானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது சொத்தை தனக்கு தெரியாமல் அபகரிக்க முயற்சிப்பதாகவும், தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் சரிதா பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில், "தன்னுடைய தாய் பெயரில் உள்ள சொத்துக்கள் வாரிசுகளான தனக்கும், தனது சகோதரிக்கு மட்டுமே உரிமை உள்ளது.

ஆனால், என்னுடைய தந்தை மற்றும் சகோதரியின் கணவர் இருவரும் சேர்ந்து தனது பெயரை மறைத்து தன் தாய்க்கு ஒரே வாரிசு இருப்பது போல போலியாக ஆவணம் செய்து தனது சகோதரி முருகேஸ்வரி பெயருக்கு அனைத்து சொத்தையும் மாற்று ஆவணம் செய்து உள்ளனர். மேலும் தனது சகோதரி கணவர் சங்கரேஸ்வரன் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் காவல் நிலைய ஆய்வாளராக இருந்து வருகிறார்.

இவரின் தூண்டுதலில் பெயரில் தனது தந்தை மற்றும் தனது சகோதரி தனக்கு எதிராக செயல்பட்டு சொத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். இது தொடர்பாக இராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தேன். ஆனால் அங்கு சார்பு ஆய்வாளரான தனது சகோதரியின் கணவர் ஆய்வாளர் சங்கரேஸ்வரனுக்கு ஆதரவாக தனது புகார் குறித்து விசாரிக்காமல் தன்னை ஆபாசமாக பேசி தனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

மேலும் தான் தற்போது வசிக்கின்ற எனது தாயாரின் வீட்டில் இருந்து தன்னை வெளியேற்ற கம்பம் ஆய்வாளர் சரவணன் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றார். வீட்டை விட்டு வெளியே வருவதற்கே பயமாக உள்ளது. எங்களுக்கும், எங்களது குழந்தைக்கும் பாதுகாப்பு என்பதே இல்லை.

ஆகையால், சொத்துக்காக தனது குடும்பத்தினரே கொலை மிரட்டல் விடுவதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது தாயின் சொத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கினை பெற்று தந்து, மேலும் தனது உயிருக்கு பாதுகாப்பு கொடுக்கும்படியும் தனது கணவருடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனுவை அளித்து உள்ளேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுபானம் உரிமம் விதி திருத்தம்: சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதா? - விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.