கேரளா: இடுக்கி மாவட்டம் எலப்பாறை-கோழிகானம் ஏலக்காய் எஸ்டேட்டில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் ராஜூ குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றார்.
இந்தப் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், இவரது மனைவி புஷ்பா இன்று (ஜூலை 4) அதிகாலை 4 மணிக்கு சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென மண்சரிவு ஏற்பட்டு, சமையலறை மீது மண்சரிந்ததில் புஷ்பா மண்ணில் புதைந்தார்.
இந்த சத்தம் கேட்டு, வீட்டின் மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த புஷ்பாவின் கணவர் மற்றும் மகன்கள், மகள் உடனடியாக வந்து அருகில் வசிப்பவர் உதவியுடன் புஷ்பாவை மீட்கப் போராடினர்.
முடியாததால் உடனடியாக பீர்மேடு தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு விரைந்து வந்த அவர்கள் புஷ்பாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: உயிர் வாங்கும் மரங்கள்... பராமரிப்பில் கோட்டைவிடுகிறதா சென்னை மாநகராட்சி?!