ETV Bharat / state

தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியான மூணாரில் திடீர் நிலச்சரிவு - ஒருவர் மாயம்! - tempo van overturned in a landslide

மூணாரில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் அதில் டெம்போ வேன் ஒன்று அடித்து செல்லப்பட்டதாகவும், ஒருவர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியான மூணாரில் திடீர் நிலச்சரிவு-ஒருவர் மர்மம்

author img

By

Published : Nov 12, 2022, 10:44 PM IST

தேனி: கேரளா மாநிலம் மூணாறில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மூணார் குண்டலை புதுக்குடி மலைப்பகுதியில் தொடர் மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்போது அந்த சாலை வழியாக சென்ற டெம்போ வேன் ஒன்று அந்த நிலச்சரிவில் சிக்கி கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து அந்த டெம்போ வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் காணவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நிலச்சரிவு குறித்து தகவல் மீட்பு படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளத்தில் கவிழ்ந்த டெம்போ வேன் மற்றும் ஓட்டுநரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியான மூணாரில் திடீர் நிலச்சரிவு-ஒருவர் மர்மம்

மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அடித்துச் செல்லப்பட்ட வேன் மற்றும் அதில் இருந்த ஓட்டுநரை மீட்கும் முயற்சியில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தி.மலை அருகே விவசாய பணியின் போது மின்னல் தாக்கியதில் பெண் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.