ETV Bharat / state

கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் தூக்கிட்டு தற்கொலை!

தேனி: கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் மன உளைச்சலால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

A man who returned home after corona treatment committed suicide by hanging in theni

author img

By

Published : Aug 24, 2020, 10:30 PM IST

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் வசித்து வந்த 57 வயதுடைய நபருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் தேனி அருகேயுள்ள தனியார் பள்ளி முகாமில் சிகிச்சை பெற்று கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி வீடு திரும்பினார்.

மூங்கில் கடை நடத்தி வந்த இவருக்கு மனைவி மற்றும் இருமகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு கணவன் - மனைவி இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்துள்ளனர்.

இரு மகன்களும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரோனா சிகிச்சை முடிந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.