ETV Bharat / state

தேனியில் இளைஞர் கொலை: 9 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்! - kombai

தேனியில் முன் விரோதம் காரணமாக இளைஞரை ஒன்பது பேர் கொண்ட கும்பல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன் விரோதத்தால் இளைஞர் கொலை! ஒன்பது பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயலால் பரபரப்பு

author img

By

Published : May 25, 2023, 11:21 AM IST

தேனி: உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி அரண்மனை தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சதீஷ்குமார் நேற்று முன்தினம் (மே 23) இரவு மர்ம கும்பலால் தாக்குதல் நடத்தி, கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து அவரது தந்தை மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், சதீஷ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு சில இளைஞர்களிடம் பொது இடத்தில் வைத்து தகாத வார்த்தைகளில் பேசி அடிதடியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

இதையும் படிங்க: கார் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்து.. 5 பேர் உயிரிழப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..

எனவே, அந்த முன்பகையின் காரணமாக ஒன்பது பேர் கொண்ட கும்பல் ஒன்றிணைந்து இளைஞர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், விசாரணையின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், பிரவீன், தீபக், புகழேந்தி, மற்றும் சூர்யா ஆகிய ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

மேலும், கொலை குற்றத்திற்கு உறுதுணையாக இருந்த நான்கு பேரை வலைவீசி தேடி வருகின்றனர். பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை 9 பேர் கொண்ட கும்பல் முன் பகைக்காக ஒன்றினைந்து கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இதையும் படிங்க: விஷச்சாராயம் விவகாரம்: 11 பேரை காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.