தேனி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தற்போது அணையில் 139.55 அடி நீர்மட்டம் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு விநாடிக்கு 10,669 கன அடிக்கு மேல் நீர் வரத்து வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக கேரளப்பகுதிக்கு 13 ஷட்டர்கள் வழியாக 10,400 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
ரூல் கர்வ் விதிமுறையின்படி தற்போது பத்தாம் தேதி வரை அணையில் 137.50 அடி நீரை மட்டுமே தேக்கி வைக்க முடியும் என்பதால் கூடுதலாக கேரளப்பகுதிக்கு நீர் திறக்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஜாகுவார் காருக்கு மூவர்ண பெயிண்ட் அடித்த தொழிலதிபர் - Vibe Modeஇல் சுதந்திர தின கொண்டாட்டம்