ETV Bharat / state

'திமுக ஆட்சிக்கு வந்ததும் 8 வழிச்சாலை திட்டம் மாற்றியமைக்கப்படும்'- தங்க தமிழ்ச்செல்வன் - dmk news

திமுக ஆட்சிக்கு வந்ததும் சேலம் எட்டுவழிச்சாலை திட்டம் மாற்றியமைக்கப்படும் என தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Thanga Tamil Selvan
'திமுக ஆட்சிக்கு வந்ததும் 8 வழிச்சாலை திட்டம் மாற்றியமைக்கப்படும்'- தங்க தமிழ்ச்செல்வன்
author img

By

Published : Dec 8, 2020, 3:37 PM IST

தேனி: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்திருந்தனர்.

அதனடிப்படையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணக்குமார், முன்னாள் பெரியகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர் தலைமையில் நகரின் முக்கிய வீதிகளில் திறக்கப்பட்டிருந்த கடைகளை அடைத்து வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கூறிவந்தனர்.

இதைத்தொடர்ந்து, பெரியகுளம் தென்கரை, மார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடைகளை வியாபாரிகள் அடைக்கத் தொடங்கினர்.

வியாபாரிகளை கடையை அடைத்து ஆதரவளிக்க வேண்டிய திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உள்பட 30க்கும் மேற்பட்டோரை பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான காவலர்கள் கைது செய்தனர்.

'திமுக ஆட்சிக்கு வந்ததும் 8 வழிச்சாலை திட்டம் மாற்றியமைக்கப்படும்'- தங்க தமிழ்ச்செல்வன்

கைது செய்யப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய தங்கத் தமிழ்செல்வன், "நாடு முழுவதும் நடைபெற்றுவரும் வேலை நிறுத்தத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை.

ஆனால், தமிழ்நாட்டில் துணை முதலமைச்சரின் சொந்த ஊரான பெரியகுளத்தில் மட்டும் திமுக எம்எல்ஏ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது" என்றார்.

Thanga Tamil Selvan
கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த திமுகவினர்

எட்டுவழிச்சாலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "எட்டுவழிச்சாலை திட்டம் கைவிடப்படவேண்டும் என்பதுதான் திமுக தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையாகும்.

ஆனால், எடப்பாடி வாங்கிய கமிஷனுக்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்த துடிக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் மாற்றியமைக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: சாலையில் பூவை கொட்டி விவசாயிகள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.