தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. அதன் ஒரு பகுதியான தேனியில் ஆண்டிபட்டி, கடமலை - மயிலை, போடி, தேனி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் இறுதி நாள் வேட்பு மனு தாக்கல் பரபரப்புடன் நடைபெற்றது. இதில் அதிமுகவும் திமுகவும் பெரும்பாலான இடங்களில் நேருக்கு நேர் மோதுகின்றன.
இங்கு மொத்தமுள்ள 10 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக -18, திமுக- 15, காங்கிரஸ்-1, கம்யூனிஸ்ட்-1, பாஜக-2, அமமுக- 10, தேமுதிக -1, நாம் தமிழர் -9 , சுயேச்சைகள் 5 பேர் என மொத்தமாக 65 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என 552 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து, 130 கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 653 பேர்களும், 1,161 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களுக்கு 3,110 பேர் ஆக மொத்தம் 4 ஆயிரத்து 380 பேர் தங்களது வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலர்களிடம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூட்ட நெரிசலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த கர்ப்பிணி!